வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 4:22 pm

வாழைச்சேனை கடதாசி ஆலையில் தொழில்புரிந்த ஊழியர்களின் நிலுவை சம்பளத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடதாசி ஆலையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று (21) முற்பகல் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 மாத சம்பள நிலுவை வழங்கப்படாமையால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஊழியர்களுக்கான சம்பள நிலுவை தொடர்பில் வாழைச்சேனை கடதாசி ஆலையின் மனிதவள முகாமைத்துவ பிரிவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

புதிய அமைச்சரவையில் கடதாசி ஆலைக்கான அமைச்சு தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என மனிதவள முகாமைத்துவ பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அமைச்சு அறிவித்ததன் பின்னர் கடதாசி ஆலைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அறியப்படுத்தி இதற்கான தீர்வை, பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்