மிரிஸ்ஸ பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற நால்வர் கைது

மிரிஸ்ஸ பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற நால்வர் கைது

மிரிஸ்ஸ பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை கடத்திச் செல்ல முயன்ற நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 8:28 pm

மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் பிரித்தானிய பிரஜை ஒருவரை தாக்கி அவரது காதலியை கடத்த முற்பட்ட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிரிஸ்ஸ கடற்கரையில் இடம்பெற்ற விருதுபசாரத்தில் கலந்து கொண்டு அதிகாலை 3 மணிக்கு தமது இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த சம்பவம், அருகில் இருந்த உணவகத்தின் CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஹோட்டலின் ஊழியர்கள் மூவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்