கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
புத்தளம் – ஆனமடுவ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் – ஆனமடுவ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் – ஆனமடுவ வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 8:44 am

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ – தோணிக்கல் பகுதியில் லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி நேற்று மாலை விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இந்த விபத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்டபோது பிரதேச மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்