கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
புத்தளத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

புத்தளத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

புத்தளத்தில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 4:04 pm

புத்தளம், கந்ததொடுவாய் பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் பொலிஸார் நேற்று (20) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கோடா பீப்பாய்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்