சேயா சதெவ்மி படுகொலை: சந்தேகநபர்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்

சேயா சதெவ்மி படுகொலை: சந்தேகநபர்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்

சேயா சதெவ்மி படுகொலை: சந்தேகநபர்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 7:18 pm

கொட்டதெனியாவ சேயா சதெவ்மியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரியிடம் இன்று (21) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இரண்டு சந்தேக நபர்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் பின்னர் சந்தேகநபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 17 வயது சந்தேகநபரின் கணணி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றும் நாட்டின் பல பகுதிகளிலும் சேயா சதெவ்மியின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்