சிலியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் அதிகமானோர்  இடம்பெயர்வு

சிலியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் அதிகமானோர் இடம்பெயர்வு

சிலியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் அதிகமானோர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 5:40 pm

சிலியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் சுமார் 9000 இற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

சிலியில் கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்போது சிலியிலுள்ள துறைமுகமொன்றிலுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் நிலப் பரப்பிற்குள் வந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பூகம்பத்தினால் குறித்த துறைமுகம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல்வாழ் உயிரினங்களும் கரையை நோக்கி வந்துள்ளன.

இந்த பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து, பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்