சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

சிறுவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 8:36 am

சிறுவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சுமார் 6,500 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,500 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஷா பாலேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தவருடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டஷா பாலேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்