பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 10:27 am

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 9.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

குறித்த இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த இடத்தை அகழ்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்