கிரீஸ் பாராளுமன்ற தேர்தலில் அலெக்சிஸ் சிப்ராஸ் அமோக வெற்றி

கிரீஸ் பாராளுமன்ற தேர்தலில் அலெக்சிஸ் சிப்ராஸ் அமோக வெற்றி

கிரீஸ் பாராளுமன்ற தேர்தலில் அலெக்சிஸ் சிப்ராஸ் அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 11:42 am

ஐரோப்பிய நாடுகளில் பழம் பெருமை வாய்ந்த கிரீஸ் நாடு நிதி நெருக்கடியில் மூழ்கியது. அதை சீரமைக்க அப்போது பிரதமராக இருந்த அலெக்சிஸ் பிரான்சிஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. அதையடுத்து செப்டம்பர் 20 ஆம் திகதி திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதன் மூலம் கிரீஸ் நாடு 6 ஆண்டுகளில் 5 ஆவது முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்தித்தது.

300 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. முன்னாள் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸின் சிரிஸா கட்சிக்கும், வான் ஜெலிஸ் மெய்ராகிசின் புதிய ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஆட்சியை கைப்பற்றுவது யார் என்ற கேள்விக்குறியுடன் வாக்குப்பதிவு நடந்தது. ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 60% மான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சிப்ராஸின் சிரிஸா கட்சி எதிர்பார்த்த அளவை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.

அதாவது இக்கட்சிக்கு 35 % வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சிக்கு 28 % வாக்குகளும் கிடைத்தது. கோல்டன் டாவ்ன் என்ற கட்சி 3 ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இக் கட்சிக்கு 7.1 % வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அலெக்சிஸ் சிப்ராஸ் கட்சிக்கு இன்னும் குறைந்த அளவிலான வாக்குகளே தேவை. எனவே, அவர் சுயேட்சைகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் பிரதமராகிறார்.

தேர்தலில் சிரிஸா கட்சி வெற்றி பெற்ற செய்தி வெளியானதும் அக்கட்சி தொண்டர்கள் தலைநகர் எதென்சில் உள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்தியில் அலெக்சிஸ் சிப்ராஸ் தோன்றினார். கரகோஷங்கள் மற்றும் பட்டாசு வெடி முழக்கத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு ஏராளமான தொண்டர்கள் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் மத்தியில் சிப்ராஸ் பேசினார். அப்போது மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க தொடர்ந்து போராட போவதாக அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்