கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
ஊர்காவற்றுறையில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறார் இருவர் உயிரிழப்பு

ஊர்காவற்றுறையில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறார் இருவர் உயிரிழப்பு

ஊர்காவற்றுறையில் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறார் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 8:11 am

யாழ்.ஊர்காவற்றுறை நாரந்தன பகுதியில் ஆற்றிற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நாரந்தன பகுதியை சேர்ந்த 11 மற்றும் 8 வயதான இரண்டு சிறுவர்களே ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதே பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்