இளையராஜாவை கண் கலங்க வைத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன்

இளையராஜாவை கண் கலங்க வைத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன்

இளையராஜாவை கண் கலங்க வைத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 11:28 am

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இசைஞானி இளையராஜாவை கண் கலங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சாதாரணமாக ஒருவர் இளையராஜாவுடன் இருக்கும் போட்டோவில் என்ன புதுமை இருக்கிறது என்பது கேள்வியாக இருக்கும்.

படத்தில் இசை ஞானியுடன் இருப்பவர் இன்னும் ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வாரத்திலோ மரணத்தை தளுவப்போகிறவர்.ஆம்! அவருக்கு புற்று நோய். மிகவும் முற்றிய நிலையிலே அதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இனி மருத்துவம் பார்த்தாலும் பிழைக்க வழியில்லை என்ற நிலையில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்தான் தனது கடைசி ஆசையை எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார். அது என்னவென்றால் இசைஞானி இளையராஜாவை நேரில் பார்க்கவேண்டும் என்பதுதான் அது.

எங்கெங்கோ தேடி கடைசியில் அண்ணன் தேனி கண்ணன் மூலமாக தகவலை ராஜாவுக்கு சொல்லியிருக்கிறார்கள். இதை கேள்விப்பட்ட ராஜா கலங்கி விட்டாராம், ”என்னய்யா சொல்ற” என்றவர் வாங்க அந்த பையனை அவர் வீட்டிலேயே போய் சந்திக்கலாம் என்றிருக்கிறார்.

முடிவாக கடந்த சனியன்று அவர் இசைக்கூடத்திற்கே வரவழைக்கப்பட்டார். வந்தவர் இளையராஜாவை பார்த்ததும் சொன்னது “எனக்கு சாமியே நீங்கதான், உங்க பாடலைக் கேட்காமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை, எனக்கு இது போதும் என்று என்று சொல்லி கலங்கி விட்டார். அவரை அணைத்துக்கொண்ட ராஜாவும் கலங்கிவிட்டார். கொஞ்ச நேரம் எதுவும் பேச முடியாதவராகி விட்டார்.

யாரும் புகைப்பிடிக்காதீர்கள் என அந்த புற்றுநோயாளி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்