இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்காக குழு நியமனம்

இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்காக குழு நியமனம்

இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கை தொடர்பிலான ஆய்விற்காக குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 8:30 am

இலங்கை தொடர்பான ஜெனீவா அறிக்கையை ஆய்வுக்குட்படுத்துவதற்கான குழு ஒன்றை அமைப்பதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பு குறித்தான அறிக்கை தொடர்பில்  நாட்டிலுள்ள தேர்ச்சிபெற்ற சட்டத்தரணிகளின் உதவியுடன் ஒரு வாரத்திற்குள் தீர்மானங்களை அறிவிக் முடியும் என பிரதி அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

உள்ளக பொறிமுறைகளுக்கு விசேடமாக சர்வதேச நுட்பங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே குறித்த அறிக்கை தொடர்பில் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையை சார்ந்த சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னரே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் எனவும் பிரதி அமைச்சர் நிமல் லான்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தேவையான இராஜதந்திர நடவடிக்கைகளை ஜெனீவாவிற்கு சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகள் முன்னெடுத்து வருவதாக பிரதி வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளிடம் இன்று கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன.

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளிடம் அமெரிக்க தீர்மானத்தின் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் 26 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜெனீவா மனித உரிமைகள் விசாரணை அறிக்கை தொடர்பில் இலங்கை வௌியிட்டுள்ள சாதகமான பதிலை அமெரிக்கா தமது தீர்மானத்தில் வரவேற்றுள்ளது.

பக்கச்சார்பற்ற மனித உரிமை விசாரணை, நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறை மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை ஆகியவற்றுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்