அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

21 Sep, 2015 | 7:25 pm

அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (21) முற்பகல் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது 3 விடயங்கள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக பிரதி சபாநாயகரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவில் அமைப்புக்கள் சார்பாக அரசியல் அமைப்பு பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள மூவரின் பெயர்களுக்கான அனுமதியை நாளை (21) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது பெற்றுக்கொள்ளவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரின் பெயர்கள் இதற்காக முன்மொழியப்பட்டுள்ளன.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான பெயர்ப் பட்டியலை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை 30 ஆம் திகதி வரை நீடிக்கவும் இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை பூரணமாக ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்