வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடி ஔிபரப்பாகும் – திலங்க சுமதிபால

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடி ஔிபரப்பாகும் – திலங்க சுமதிபால

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடி ஔிபரப்பாகும் – திலங்க சுமதிபால

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 10:06 am

அடுத்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பாராளுமன்ற விவாத நடவடிக்கைகள் நேரடி ஔிபரப்பு செய்யப்படும் என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் தினங்களில் இரண்டு மணித்தியாலங்கள் நேரடி ஔிபரப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேரடி ஔிபரப்பு 4 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற அமர்வு முழுவதையும் நேரடியாக ஔிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக அரச ஊடகத்தில் ஔிபரப்பு நேரத்தை பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்