ரயில் தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 4:37 pm

ஸ்ராவஸ்திபுரம், தலாவ ஆகிய பகுதிகளுக்கு இடையே ரயில் ஒன்று தடம்புரண்டதால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறைக்குப் பயணித்துக்கொண்டிருந்த ரயில் ஒன்றே இன்று பிற்பகல் 2.15 அளவில் தடம்புரண்டுள்ளது.

இதற்கமைய, வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தலாவ ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று பிற்பகல் 3.50 க்கு கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் செல்லவிருந்த கடுகதி ரயில் சேவையை இரத்து செய்ய நேரிட்டதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்