மத்திய, வடமேல் மாகாண யூ ரிப்போர்ட்டர் மாநாடு: திறமையானவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

மத்திய, வடமேல் மாகாண யூ ரிப்போர்ட்டர் மாநாடு: திறமையானவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

மத்திய, வடமேல் மாகாண யூ ரிப்போர்ட்டர் மாநாடு: திறமையானவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 12:01 pm

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நியூஸ்பெஸ்ட்டிற்கான யூ ரிப்போர்ட்டர் மாநாடு கண்டி ஈ.எல்.சேனாநாயக்க வாசகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, மத்திய மற்றும் வடமேல் மாகாணத்தில் பிரஜைகள் ஊடகத்துறையில் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அந்தவகையில், வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த அருண பிரியஷாந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் சிறந்த வகையில் திறமைகளை வெளிப்படுத்திய சந்தன உடுவெல்ல, சிறந்த யூ ரிப்போர்ட்டருக்கான விருதினை சுவீகரித்தார்.

மேலும், மாத்தளை மாவட்டத்தில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய சபீர்கான், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கண்டியைச் சேர்ந்த அநுர ஆனந்தவும் சிறந்த யூரிப்போர்ட்டராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்