தூண்டாய் கடலில் மூழ்கி காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு

தூண்டாய் கடலில் மூழ்கி காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு

தூண்டாய் கடலில் மூழ்கி காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 3:39 pm

முல்லைத்தீவு தூண்டாய் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனுடன் நீரில் மூழ்கிய மற்றுமொரு இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தூண்டாய் கடலுக்குக் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களே நேற்று (19) முற்பகல் நீரில் மூழ்கியிருந்தனர்

உடுப்புக்குளம் மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்