துபாய் ஆட்சியாளரின் மகன் தமது 33 ஆவது வயதில் மாரடைப்பால் மரணித்தார்

துபாய் ஆட்சியாளரின் மகன் தமது 33 ஆவது வயதில் மாரடைப்பால் மரணித்தார்

துபாய் ஆட்சியாளரின் மகன் தமது 33 ஆவது வயதில் மாரடைப்பால் மரணித்தார்

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 1:27 pm

துபாய் ஆட்சியாளரின் மூத்த மகன் ஷேக் ரஷீத் பின் முகமது  தனது 33 ஆவது வயதில் மாரடைப்பினால் இன்று மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அவரது மூத்த மனைவி ஷேகா ஹிந்த் பிந்த் மக்தூம் பின் ஜுமா அல் மக்தூமின் முதல் மகன் ஷேக் ரஷீத் ஆவார்.

ஷேக் ரஷீத் தீவிர விளையாட்டு வீரர். குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுடையவர். அவரது இளைய சகோதரர் ஷேக் ஹம்டான் துபாயின் இளவரசராக உள்ளார்.

அமீரக அமைப்பின் ஏழு நாடுகளில் வர்த்தக மையம் என்ற முக்கிய நாடாக துபாய் உள்ளது. ஷேக் ரஷீத்தின் மரணத்தை அடுத்து அந்நாட்டில் 3 நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்