சேயா சதெவ்மி கொலை: 17 வயது சந்தேகநபரின் மடிக்கணனியை ஆய்வுக்குட்படுத்த தீர்மானம்

சேயா சதெவ்மி கொலை: 17 வயது சந்தேகநபரின் மடிக்கணனியை ஆய்வுக்குட்படுத்த தீர்மானம்

சேயா சதெவ்மி கொலை: 17 வயது சந்தேகநபரின் மடிக்கணனியை ஆய்வுக்குட்படுத்த தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 4:21 pm

கொட்டதெனியாவ சிறுமியின் (சேயா சதெவ்மி) கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 17 வயது சந்தேகநபரின் மடிக்கணனியை ஆய்வுக்குட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மடிக்கணனியில் பெருமளவில் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மடிக்கனணியை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவிற்கு அனுப்பி அதிலுள்ள ஆபாசப் படங்கள் மற்றும் ஏனைய மென்பொருட்கள் பற்றிய ஆய்வறிக்கையினை பெறவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் சடலத்தில் இருந்த சந்தேகத்திற்கிடமான மரபணுக்களுடன், விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேகநபர்களின் மரபணுக்களை ஒப்பிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை தொடர்பிலான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்