சேயா சதெவ்மியைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

சேயா சதெவ்மியைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

சேயா சதெவ்மியைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 12:11 pm

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமி சேயா சதெவ்மியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புத்தளம் நகர் மத்தியில் இன்று காலை 9.30 அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கொட்டதெனிய சிறுமி சேயா சதெவ்மியின் கொலை தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களும் எழுப்பப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்