சாவகச்சேரியில் தனியார் காணியிலுள்ள கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

சாவகச்சேரியில் தனியார் காணியிலுள்ள கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

சாவகச்சேரியில் தனியார் காணியிலுள்ள கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 11:31 am

யாழ். சாவகச்சேரியில் ஒருதொகை வெடிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய தனியார் காணியொன்றிலிருந்த கிணற்றிலிருந்து நேற்று (19) மாலை வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைப்பற்றப்பட்ட வெடிபெருட்கள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்