பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில் வெளியாகவுள்ளது

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில் வெளியாகவுள்ளது

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில் வெளியாகவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 10:17 am

கடந்த வருடம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பல்கலைக்கழகத்தில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, 65 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை புதிய பாடத்திட்டங்கள் பல்கலைக்கழக கல்வித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்