அடிப்படை வசதிகளற்ற நிலையில் 3000 பாடசாலைகள்: அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டம்

அடிப்படை வசதிகளற்ற நிலையில் 3000 பாடசாலைகள்: அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டம்

அடிப்படை வசதிகளற்ற நிலையில் 3000 பாடசாலைகள்: அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2015 | 10:36 am

அடிப்படை வசதிகளற்ற 3000 பாடசாலைகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 2000 பாடசாலைகளுக்கு சுத்தமான குடிநீர் வசதியில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த பாடசாலைகளிலுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி செயற்பாடுகள் குறித்து பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகளுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்