விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா

விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா

விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் 3D வீடுகள் அமைக்கவுள்ள நாசா

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 6:35 am

செவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியில் நீண்ட காலமாக தீவிரமாகவே ஈடுபட்டு வரும் நாசா, தனது ஆய்வின் அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தங்குமிடம் ஒன்றை அமைக்கவுள்ளது.

மனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனைகளை 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை நாசா அமைக்கவுள்ளது.

கூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும். 3 ஆவது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது.

2 ஆவது தளம் 29 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் இதில் பணியிடமும் கழிவறைகளும் இருக்கும், தரைத்தளம் 40 சதுர மீட்டர் அளவு இருக்கும்.

இதில் விண்வெளி வீரர்களுக்கான தங்கும் அறைகள் இருக்கும். மேலும் இந்த 3 தளங்களுக்கும் விரைவாக பயணிக்கும் வகையில் ஸ்பைரல் மாடிப்படியும் அமைக்கப்படும்.

இதற்கான மாதிரிகள் 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் அனுபவம் கொண்ட பிரான்ஸ் கட்டிடக் கலைஞர்களால் லண்டனில் தயாரிக்கப்படவுள்ளது.

தயாரிப்பு பணிகள் முடிந்ததும் கலிபோர்னியாவில் உள்ள பாலைவனத்தில் பரிசோதிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்தில் இது நிறுவப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்