வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரது வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டது

வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரது வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 5:35 pm

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் மாகாண சபை உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் மீள் நிரப்பப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அதற்கமைய, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள தர்மலிங்கம் சித்தார்தனின் மாகாண சபை இடத்திற்கு கணபதிப்பிள்ளை சித்தார்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் மாகாண சபை இடத்திற்கு வல்லிபுரம் கமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள வட மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்