ரக்னா லங்கா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஒப்புதல்

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஒப்புதல்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 12:05 pm

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன ஒப்புதல் அளித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்தபோதே அவர் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3,473 துப்பாகிகளை சட்டத்திற்குப் புறம்பான வகையில் விநியோகித்துள்ளதாகவும், சட்ட ரீதியாக 89 துப்பாக்கிகளே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது சாட்சியத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்