மனைவி, குழந்தையை கடலில் தள்ளிய நபர் கைது

மனைவி, குழந்தையை கடலில் தள்ளிய நபர் கைது

மனைவி, குழந்தையை கடலில் தள்ளிய நபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 5:11 pm

கொஸ்கொட, மஹபெலஸ்ஸ பகுதியில் மனைவியையும் குழந்தையையும் கடலில் தள்ளிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலில் தள்ளிவிடப்பட்டு காணாமற்போயுள்ள குழந்தையைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் நேற்றிரவு தனது மனைவியையும் குழந்தையையும் கடலில் தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் தள்ளி விடப்பட்ட அவரது மனைவி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இரண்டு வயது குழந்தையே காணாமற்போயுள்ளது.

மீட்கப்பட்ட பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்