நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 12:40 pm

சில பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

கனேமுல்ல – கடவான பிரதானவீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியால் பயணித்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளார்.

56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பிலிமதலாவை தந்துரே வீதியின் யட்டகம பகுதியில் முச்சகரவண்டியும், பஸ்வண்டியும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்ககையில் இந்த விபத்து சம்பவிக்க நேரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவேளை ஹபரண திருகோணமலை வீதியில் டிப்பர் வண்டியும், கென்டய்னரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதுடன் படுகாயமடைந்த ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்