கணேமுல்லயில் சிறுமி துஷ்பிரயோகம், வீதியிலிறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம்

கணேமுல்லயில் சிறுமி துஷ்பிரயோகம், வீதியிலிறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 9:19 pm

கணேமுல்ல பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி தந்தையை இழந்தவர் என்பதுடன் தாய் தொழிலுக்குச் செல்வதால் உறவினர் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தார்.

இவ்வாறான தருணத்திலேயே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த அசம்பாவிதத்தால் கொதித்தெழுந்த கணேமுல்ல பிரதேசவாசிகள், பிரதான வீதியை மறித்து இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த வித்யா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை, கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் 3 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களின் தொடர் கொடூரமாக கொட்டதெனியாயவைச் சேர்ந்த செயா சதெவ்மி என்ற சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறான மிலேச்சத்தனமான செயல்களைத் தடுக்க மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென சமூகத்தில் எழுந்துள்ள கருத்துக்கு இதுபோன்ற சம்பவங்களே காரணமாகவுள்ளதாக அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறுவர் விவகார அமைச்சர் சந்த்ராணி பண்டார சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்