தென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

தென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

தென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 12:36 pm

தென்மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் இருவர் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தென்மாகண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சங்ஜீவ கருணாதிலக மற்றும் சுமணசிறி லியனகே ஆகியோரே பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் பந்துல லால் பண்டாரிகொட மற்றும் விஜேபால கொட்டியாரச்சி ஆகியோர் கடந்த பொதுத் தேர்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்