தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் போலியானது என உறுதியாகியுள்ளது – பாட்டலி

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் போலியானது என உறுதியாகியுள்ளது – பாட்டலி

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் போலியானது என உறுதியாகியுள்ளது – பாட்டலி

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 7:26 pm

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை குறித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தார்.

அவர் குறிப்பிட்டதாவது;

[quote]ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் காணப்பட்ட உண்மையான சூழலை வெளிப்படுத்துவதாக அது இல்லை. எவ்வாறாயினும், அந்த அறிக்கையில் பெரும்பாலான விடயங்கள் மற்றும் அந்த அறிக்கை வெளியிடப்படும் போது இடம்பெற்ற ஊடக சந்திப்புகள் காரணமாக இந்த நாடு குறித்து காணப்பட்ட பாதகத்தன்மை குறைவடைந்துள்ளது. நாட்டில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம் போலியானது என உறுதியாகியுள்ளது. அதேபோன்று பாதுபாப்புத் தரப்பு மற்றும் சிவில் உறுப்பினர்கள் 42 பேர் இருக்கிறார்கள் என பெயரளவில் கூறியது போலி என்பதும் வெளியாகியுள்ளது. எமது நாட்டுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என்ற சந்தேகமும் இல்லாமல் போயுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத்தினர் வெளிநாடுகளில் கைது செய்யப்படுவார்களா என்ற சந்தேகமும் நீங்கியுள்ளது. எவ்வாறாயினும் இது பக்கசார்பான அறிக்கை. இந்த அறிக்கையில் ஏதேனும் தீர்மானங்கள் காணப்படுமாயின் அதனை அவ்வாறே செயற்படுத்த இலங்கைக்கு கடப்பாடு கிடையாது. ஜ.நா பொது சபையிலும் பாதுகாப்பு சபையிலும் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செயற்படுத்த வேண்டி ஏற்படும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்