சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று பொலிஸாரிடம் ஒப்படைப்பு

சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று பொலிஸாரிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 6:56 am

கொட்டதெனியாவயில், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா சதெவ்மியின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று (18) பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜின்டெக் நிறுவனத்தினால் மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் 3 விசேட பொலிஸ் குழுக்கள், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மரபணு பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னர் சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யும் நடவடிக்கை இலகுவாகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுமி சேயா சதெவ்மியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் இதுவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்