சிலியில் ஏற்பட்ட நில அதிர்வினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

சிலியில் ஏற்பட்ட நில அதிர்வினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

சிலியில் ஏற்பட்ட நில அதிர்வினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 9:54 am

சிலியில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

சாண்டியாகோ வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் நேற்று (17) அதிகாலை ஏற்பட்டது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் ஆரம்பத்தில் 7.9 ரிக்டர் அளவில் பதிவான நில நடுக்கம் சடுதியாக 8.4 ரிக்டர் அளவிற்கு அதிகரித்தது.

இந்த நிலஅதிர்வினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றென தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அந்த தொகை 10 ஆக உயர்வடைந்துள்ளது.

சில அதிர்வுகளை தொடர்ந்து இந்த பாரிய நில நடுக்கம் பதிவாகியிருந்தது.

நில அதிர்வின் காரணமாக சிலியின் தலை நகரும் பெரிய நகருமான சாண்டியாகோவின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து மார்க்கங்களும் ஸ்தம்பித நிலையில் காணப்படுகின்றன.

எனினும் இன்று (18) காலை முதல் அனைத்தும் இயங்க ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இருப்பினும் பாடசாலைகள் மற்றும் கல்வி திணைக்களங்கள் இன்னமும் திறக்கப்படவில்லை.

சாதாரணமாக சிலியில் உள்ள புவி அதிர்வு ஆய்வு மையத்தில் 2 அதிகாரிகளே கடமையாற்றி வரும் நிலையில் நில அதிர்வை தொடர்ந்து அதிகாரிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்