சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 7:07 am

சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஜெரோம் வெல்கே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மீள் அறிவித்தல் வரை ஜெரோம் வெல்கே கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை வழங்கபட்டுள்ளதாவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ண போட்டிகளுக்கான அனுமதி பத்திரங்களை குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது

பிரான்சை சேர்ந்த ஜெரோம் வெல்கே கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்துள்ளார்.

சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்