கல்விக்கான நிதியை  அடுத்த வருடத்திலிருந்து அதிகரிக்கவுள்ளோம் : பிரதமர்

கல்விக்கான நிதியை  அடுத்த வருடத்திலிருந்து அதிகரிக்கவுள்ளோம் : பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 6:55 pm

2015 ஆம் ஆண்டு கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைத்தார்.

17 ஆவது தடவையாக இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி இடம்பெறுகின்றது.

தேசிய மற்றும் சர்வதேச புத்தக பதிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கண்காட்சிக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.

இதன்போது பிரதமர் தெரிவித்ததாவது;

[quote]பாடசாலைகளுக்கான பாட நூல்களில் பாரிய குறைபாடுகள் காணப்பட்டன. இதற்கு நாம் என்ன செய்வது? சிறந்த பாட நூல்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே இலவசமாக அதனை வழங்குகின்றோம். அது பாரிய மோசடியாகியுள்ளது. இலவசமாக நூல்களை வழங்கும் வரைபிற்குள் எவ்வாறு நூல் பதிப்பாளர்களை உள்வாங்குவது என்பது தொடர்பில் தற்போது நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். சிறந்த நூல்களை வழங்குவதாயின் ஒதுக்கீட்டை அதிகரிக்கத் தயார். அடுத்த 5 ஆண்டுகளில் சிறந்த நூல்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம். 6 வீதத்தை வழங்க நாம் தயார். கல்விக்கான நிதியை கிரமமான முறையில் அடுத்த வருடத்திலிருந்து அதிகரிக்க உள்ளோம்.[/quote]

என்றார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்த புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்