இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தொடர்ந்தும் அவதியுறும் யாழ். வடமராட்சி மீனவர்கள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் தொடர்ந்தும் அவதியுறும் யாழ். வடமராட்சி மீனவர்கள்

எழுத்தாளர் Bella Dalima

18 Sep, 2015 | 7:15 pm

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமையினால், யாழ். வடமராட்சி மீனவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ். வடமராட்சி கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் கடந்த இரு தினங்களாக அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தமது வலைகளை அறுத்துச் சென்றுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர்கள் கடற்படையினருக்கு அறிவித்த போதிலும், கடற்படையினர் நடவடிக்கை எடுக்காமையினால், தாம் இன்று காலை கடற்படை முகாமிற்குச் சென்று மீண்டும் முறைப்பாடு செய்ததாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்