கடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

கடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

கடவத்தை முதல் மாத்தறை வரை அதிவேக வீதியூடான பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2015 | 9:34 am

கொழும்பிற்கு ​வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியூடாக கடுவெலயில் இருந்து கடவத்தை வரையான பகுதி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடவத்தையில் இருந்து மாத்தறை வரை இன்று (18) முதல் பஸ் சேவைகள் ஆரம்பமாகின்றன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இணைந்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கல் அமைச்சின் செயலாளர் பி.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கடவத்தையில் இருந்து மாத்தறை வரை பயணம் செய்வதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடவத்தையில் இருந்து காலி வரையான பயணத்திற்கு 400 ரூபா கட்டணம் அறவிடப்படும் என அமைச்சின் செயலாளர் கூறினார்.

கடவத்தை நகரிலிருந்து அதிகாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் அதிவேக வீதியூடாக பஸ்கள் சேவையிலீடுபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர கடவத்தை மற்றும் கம்பஹா நகரங்களில் இருந்து பத்தரமுல்ல வரையான விசேட பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பத்தரமுல்ல, செத்சிறிபாய, இசுருபாய, உள்ளிட்ட நிர்வாக தொகுதிகளில் அமைந்துள்ள அரச நிறுவனங்களின் சேவைகளை நாடிச்செல்லும் மக்கள் இந்த பஸ் சேவைகள் ஊடாக நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பெருந்தெருக்கல் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்