விஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்கு

விஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்கு

விஸ்தரிக்கப்பட்ட அதிவேக வீதி இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்கு

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 7:00 am

கொழும்பு வெளிசுற்று அதிவேக வீதியின் கடுவெல தொடக்கம் கடவத்தை வரையான பகுதி இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

ஒன்பது கிலோ மீற்றர் தூரமான இந்த அதிவேக வீதி இரவு ஒன்பது மணிக்கு பின்னர் வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் டீ.சி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களனி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாலம் காரணமாக கடுவெல நகரில் ஏற்படுக்கூடிய போக்குவரத்து நெரிசல் சிறிதளவு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்