போதைப்பொருளை ஒழிக்க புதிய செயற்றிட்டம்

போதைப்பொருளை ஒழிக்க புதிய செயற்றிட்டம்

போதைப்பொருளை ஒழிக்க புதிய செயற்றிட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 7:49 am

நாடாளவிய ரீதியில் போதைப்பொருள் அற்ற வலையங்களை ஸ்தாபிப்பதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது .

அதற்கமைய ஓராண்டு காலப்பகுதிக்குள் போதைப் பொருள் அற்ற 100 வலையங்களை அமைக்கப்படும் என தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் டொக்டர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் ஆரம்ப கட்டமாக கந்தான, ஜாஎல, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோம்பர் முதலாம் திகதி முதல் கட்டமாக 30 வீடுகளில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் டொக்டர் நிலங்க சமரசிங்க கூறியுள்ளார்.

போதைப்பொருளற்ற சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பை வழங்குமாறும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் நிலங்க சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்