நியூஸ்பெஸ்ட்டின்  192 ஆவது செயலமர்வு பதுளை மத்திய மகா வித்தியாலத்தில்

நியூஸ்பெஸ்ட்டின் 192 ஆவது செயலமர்வு பதுளை மத்திய மகா வித்தியாலத்தில்

நியூஸ்பெஸ்ட்டின் 192 ஆவது செயலமர்வு பதுளை மத்திய மகா வித்தியாலத்தில்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 12:34 pm

பாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறை தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கில் நியூஸ்பெஸ்ட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு செயலமர்வு பதுளை மத்திய மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களுக்காக நியூஸ்பெஸ்ட் நடத்தும் 192 ஆவது செயலமர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது நியூஸ்பெஸ்ட் குழாத்தினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது செயன்முறைப் பயிற்சிகளுடன் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பாடல் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன் செய்தி தயாரிப்பு மற்றும் வாசிப்பு தொடர்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அளிக்கப்பட்டது.

IMG_9280 IMG_9333 IMG_92841 IMG_93351 IMG_9275


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்