உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது உலகையே தன்பக்கம் திருப்பியவர் உலகை விட்டுப் பிரிந்தார் (Watch Video)

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது உலகையே தன்பக்கம் திருப்பியவர் உலகை விட்டுப் பிரிந்தார் (Watch Video)

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 9:43 am

பிரேசில் கால்பந்தாட்ட அணி தொடர்பில் பேசும் போது கடந்த வருடம் ஜேர்மனியுடனான அரையிறுதிப் போட்டியின் போது 7-1 எனும் அடிப்படையில் பிரெசில் தோல்வியடைந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அதுபோல அந்த நாட்டின் தீவிர ரசிகரான குளோவிஸ் பெர்ணான்டஸ் கண்ணீருடன் மாதிரி உலகக்கிண்ணத்தை கையில் ஏந்திய வண்ணம் இருந்ததையும் யாராலும் மறக்கமுடியாது.

இவர் தனது 60 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குளோவிஸ் பெர்ணான்டஸ் ‘கவுச்சோ டா கோபா’ என செல்லமாக அழைக்கப்படுகின்றார்.

பிரேசில் கால்பந்தாட்ட அணியின் 150 இற்கும் அதிகமான போட்டிகளை , 60 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று கண்டுகளித்துள்ள இவர் கடந்த வருடம் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் போது உலகப்பிரபலம் பெற்றார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கடந்த 9 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

[image_sliders]
[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/11.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/11.jpg”]
[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/21.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/21.jpg”]
[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/41.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/41.jpg”]

[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/51.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/51.jpg”]
[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/61.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/61.jpg”]
[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/7.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/7.jpg”]

[image_slider link=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/9.jpg” source=”http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2015/09/9.jpg”]

[/image_sliders]

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்