இலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2015 | 7:30 am

நாடளாவிய ரீதியில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய 114,805 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று நிறைவடைந்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையூடாக குறித்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நாடலாவிய ரீதியில் 543,353 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹசித திஷேரா தெரிவித்துள்ளார்.

அவற்றுள் 21 % இடங்கள் நுளம்பு பரவக் கூடிய வகையில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தில் நுளம்பு பரவக்கூடிய 19,163 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நுளப்பு பரவக் கூடிய வகையில் சூழலை வைத்திருந்தோர் தொடர்பில் 2,700 வழக்குகளும் குறித்த
காலப்பகுதிக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 30 பேருக்கு அத்தனகல்ல பதில் நீதவானால் தலா 5000 ரூபா வீதம் 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்