மடித்து வைக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசி விரைவில் அறிமுகம் (Watch Video)

மடித்து வைக்கக்கூடிய புதிய கைத்தொலைபேசி விரைவில் அறிமுகம் (Watch Video)

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2015 | 12:06 pm

சம்சுங் நிறுவனம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அளவிலான கைத்தொலைபேசியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் கைத்தொலைபேசி மடிக்கக்கூடிய வசதியுடன் கூடியது. இதன்மூலம் இதுவரை வெளிவந்த கைத்தொலைபேசிகளை காட்டிலும் அளவில் பெரியதாக இது காணப்படும்.

இத்தொலைபேசி தென்கொரியாவில் மாத்திரமே முன்னோடியாக வெளியிடப்படும். அதன் பின்னர் ஏனைய நாடுகளில் வெளியிடப்படும். எனினும் இது சம்சுங் வழமையாக தனது புதிய அறிமுகங்களை இவ்வாறே வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்குத.

தற்போது காணப்படும் விற்பனை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவே இவ்வகையான புதிய அறிமுகங்களை சம்சுங் சந்தைக்கு அறிமுகம் செய்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்