ஶ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தின தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்

ஶ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தின தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்

ஶ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தின தேசிய நிகழ்வு இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 12:49 pm

ஶ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு நடைபெறும் தேசிய நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனன தினத்தின் ஆரம்ப நிகழ்வு பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மேல்மாகண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அனகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜனனதினம் இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இதன் பிரதான நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி மகாபோதி விகாரையில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்