வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்று சாதனை படைத்த ‘விசாரணை’

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்று சாதனை படைத்த ‘விசாரணை’

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்று சாதனை படைத்த ‘விசாரணை’

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 3:42 pm

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விசாரணை’ இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, சரவண சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துக்குமார், சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் சமீபத்தில் நடைபெற்ற 72 ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த விழாவில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா’ என்ற பிரிவில் ‘விசாரணை’ படம் விருது வென்றுள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், தனுஷின் வொண்டர்பார் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளது.

லைக்கா நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வருகிற செப்டம்பர் 24 ஆம் திகதி வெளியிடுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்