சர்வதேச விசாரணையை  வலியுறுத்தி ஆரம்பமான நடை பயணம் இன்று யாழில் நிறைவு

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பமான நடை பயணம் இன்று யாழில் நிறைவு

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பமான நடை பயணம் இன்று யாழில் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 7:55 pm

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான நடை பயணம் இன்று (14) யாழில்
நிறைவுபெற்றது.

இன்று (14) காலை கைத்தடியில் ஆரம்பமாகிய நடை பயணத்தின் போது செம்மணி புதைகுழியில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது .

இதன் போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

இதன் பின்னர் ஏ – 9 வீதியூடாக சென்று யாழ். நகரில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன் யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்திலும் மஹஜர் கையளிக்கப்பட்டது .

இதன் பின்னர் சங்கிலியன் தோப்பை சென்றடைந்த நடைபவணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்