இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஐ.நா கூட்டத்தொடரில் மங்கள சமரவீர தெளிவுபடுத்தினார்

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஐ.நா கூட்டத்தொடரில் மங்கள சமரவீர தெளிவுபடுத்தினார்

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஐ.நா கூட்டத்தொடரில் மங்கள சமரவீர தெளிவுபடுத்தினார்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 7:38 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் இன்று (14) ஜெனீவா நகரில் ஆரம்பமானது.

இன்றைய ஆரம்ப அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கையின் மனித உரிமை நிலமை தொடர்பில் விரிவாக தெளிவுபடுத்தினார்.

இலங்கை நேரப்படி இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் மனித உரிமை ஆணையாளர் ஸைத் ராத் அல்ஹூசைன் தலைமையில் ஆரம்பமானது.

அவர் தனது ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும் உண்மையை கண்டறிவதற்காக நாட்டில் அரசியலமைப்பில் சுயாதீன, நம்பகத்தன்மையுடன் கூடிய பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இதன் போது குறிப்பிட்டார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு 2 பிரிவுகளை கொண்டிருக்கும் எனவும், சமய தலைவர்கள் அங்கத்துவம் வகிக்கும், குறைகளை கேட்டறியும் சபையொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சர்வதேச அனுபவம் வாய்ந்த குழுவினர் அங்கத்துவம் வகிக்கும் முறையான விசாரணையை நடாத்துவதற்கான தகைமையுள்ள உறுப்பினர்களை கொண்ட, காணாமற் போனோர் குறித்து ஆராயும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எண்ணியுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நீதியை நிலைநிறுத்தும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்காக அரசாங்க சட்டத்தரணிகளை கொண்ட நீதிமன்ற கட்டமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்கவும், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயவும் உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்