இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை புதன்கிழமை வௌியிடப்படும்

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை புதன்கிழமை வௌியிடப்படும்

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை புதன்கிழமை வௌியிடப்படும்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 2:03 pm

இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை வௌியிடுவதாக   ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது சிபாரிசுகளையும் அத்துடன் வௌியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவை எனவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது மனித உரிமைகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கொள்கையை வரவேற்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் செய்ட் அல் ஹுசைன் தெரிவிக்கின்றார்.

​மேலும் இலங்கையர்களுக்கான பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை உறுதிப்படுத்துவது மனித உரிமைகள் பேரவையின் கடமையாகும். அது பேரவையின் நம்பகத்தன்மைக்கும் அவசியாகும். குறித்த பொறுப்புக்கூறல் பொறிமுறை உரிய பெறுபேறுகளை வழங்கக்கூடியதும், கடந்த கால தோல்விகளில் இருந்து தீர்கமான முறையில் முன்னகர கூடியதும், மீண்டும் தவறுகள் நிகழாது என்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான ஆழமான அமைப்புசார் மாற்றங்களை கொண்டுவரக்கூடியதுமாக அமைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று ஆரம்பமானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்