அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மல்கம் டர்ன்புல் தெரிவு

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மல்கம் டர்ன்புல் தெரிவு

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மல்கம் டர்ன்புல் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2015 | 6:52 pm

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக லிபரல் கட்சியின் மல்கம் டர்ன்புல் தெரிவாகியுள்ளார்.

அவுஸ்திரெலியாவின் பிரதமராக பதவி வகித்த டொனி அபர்ட் லிபரல் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்தைமையையடுத்தே மல்கம் டர்ன்புல் பிரதமராக தெரிவாகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் பொதுக் கூட்டம் இன்று (14) நடைபெற்றது.

இதன் போது கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் டொனி அபர்ட்டுக்கு ஆதரவாக 44 வாக்குகளே கிடைத்தன.

லிபரல் கட்சியின் 54 உறுப்பினர்களின் வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவுடன் லிபரல் கட்சியின் தலைவராக மல்கம் டர்ன்புல் தெரிவானார்.

ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைத்துவத்திற்கு மல்கம் டர்ன்புல் தெரிவானதன் மூலம் அவர் அவுஸ்திரேலியாவின் 29 ஆவது பிரதமாராக தெரிவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் ஜூலி பிஷப் வெற்றியீட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்