அரசியலமைப்புப் பேரவை இன்று கூடவுள்ளது

அரசியலமைப்புப் பேரவை இன்று கூடவுள்ளது

அரசியலமைப்புப் பேரவை இன்று கூடவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2015 | 7:52 am

புதிய உறுப்பினர்களுடன் அரசியலமைப்புப் பேரவை முதற்தடவையாக இன்று கூடவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் 12 மணிக்கு பேரவை கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள் மூவர் குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்